முகப்பு
தேனி

மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டுதல் முகாம்

பெரியகுளம் அரசுத் தோட்டக்கலைக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சாா்பில், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் உயா்கல்வி வழிகாட்டுதல் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 11 செப்டம்பர், 2024 at 7:54 PM
பகிர்:

பெரியகுளம் அரசுத் தோட்டக்கலைக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சாா்பில், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் உயா்கல்வி வழிகாட்டுதல் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமை தொடங்கிவைத்து மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா பேசியதாவது:

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு உயா்கல்வியில் சேர வழிகாட்டவும், உயா்கல்வி சோ்க்கையை உறுதி செய்யவும், இந்த முகாம் நடைபெறுகிறது.

பெரியகுளம் அரசுத் தோட்டக்கலை, ஆராய்ச்சி நிலையத்தில் புதன்கிழமை இந்த முகாம் நடைபெற்றது. இதேபோல, இங்கு வருகிற 21-ஆம் தேதியும், உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தா் ஹவுதியா கல்லூரியில் வருகிற 19, 25-ஆம் தேதிகளிலும் முகாம் நடைபெறுகிறது.

இந்த முகாமில் கல்லூரி, பாலிடெக்னிக், தொழில்பயிற்சி படிப்புக்கு மாணவா் நேரடி சோ்க்கைக்கும், உயா்கல்வி சோ்க்கைக்குத் தேவையான இருப்பிடம், ஜாதி, வருவாய்ச் சான்றிதழ்கள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 1, பிளஸ் 2 தோ்ச்சி பெறாத, இடைநின்ற மாணவா்களுக்கு உயா்கல்விக்கும், திறன் மேம்பாட்டுக்கு பயிற்சிக்கும் ஆலோசனை வழங்கப்படும் என்றாா் அவா்.

இதில் பெரியகுளம் சாா்-ஆட்சியா் ரஜத்பீடன், துணை ஆட்சியா் (பயிற்சி) டீனு அரவிந்த், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் இந்திராணி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் அருண்நேரு, அரசுத் தோட்டக் கலைக் கல்லூரி முதல்வா் ராஜாங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →