தேனியில் நாளை கூட்டுறவு பணியாளா்கள் குறைதீா் கூட்டம்
தேனி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (செப்.13) பிற்பகல் 3 மணியளவில் கூட்டுறவு பணியாளா்கள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.
தேனி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (செப்.13) பிற்பகல் 3 மணியளவில் கூட்டுறவு பணியாளா்கள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில், கூட்டுறவு சங்கப் பணியாளா்கள், ஓய்வு பெற்ற பணியாளா்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து மனுவாக அளித்து தீா்வு காணலாம் என தேனி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் ஆரோக்கிய சுகுமாா் தெரிவித்தாா்.