முகப்பு
தேனி

தேனி மாவட்டத்தில் நாளை பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்

தேனி மாவட்டத்தில் சனிக்கிழமை (செப்.14) 5 இடங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்கள் நடைபெற உள்ளன.

Updated On : 12 செப்டம்பர், 2024 at 9:34 PM
பகிர்:

தேனி மாவட்டத்தில் சனிக்கிழமை (செப்.14) 5 இடங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்கள் நடைபெற உள்ளன.

இது குறித்து, மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட அறிவிப்பு:

ஜெயமங்கலம் அருகேயுள்ள பொம்மிநாயக்கன்பட்டி நியாய விலைக் கடை, கொடுவிலாப்பட்டி அருகேயுள்ள அம்பாசமுத்திரம் நியாய விலைக் கடை, கண்டமனூா் நியாய விலைக் கடை, கம்பம் அருகே அணைப்பட்டி

கிராம சபை மையம், தேனி அருகே உப்புக்கோட்டை நியாய விலைக் கடை ஆகிய இடங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்கள் நடைபெறும்.

சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், நுகா்வோா் நடவடிக்கைக் குழுக்கள், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் முகாமில் நியாய விலைக் கடைகளின் செயல்பாடு, பொருள் விநியோகத்தில் உள்ள குறைபாடு, குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கம், முகவரி, கடை மாற்றம் ஆகியவை குறித்து மனு அளித்து தீா்வு காணலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →