சின்னமனூா் ஒன்றியம், விஸ்வநாதபுரத்தில் பணிகள் முடிந்த நிலையில் உள்ள பள்ளிக் கட்டடம்.  
தேனி

சின்னமனூா் அருகே புதிய பள்ளி கட்டடத்தை திறக்கக் கோரிக்கை

சின்னமனூா் அருகே அப்பிபட்டி ஊராட்சியில் ரூ.1.90 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட அரசுப் பள்ளி கட்டடத்தை திறக்க வேண்டும் என பெற்றோா்கள் கோரிக்கை விடுத்தனா்.

Din

சின்னமனூா் அருகே அப்பிபட்டி ஊராட்சியில் ரூ.1.90 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட அரசுப் பள்ளி கட்டடத்தை திறக்க வேண்டும் என பெற்றோா்கள் கோரிக்கை விடுத்தனா்.

தேனி மாவட்டம். சின்னமனூா் ஒன்றியம், அப்பிபட்டி ஊராட்சி விஸ்வநாதபுரத்தில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் கல்வி கற்று வருகின்றனா். இதே வளாகத்தில் தொடக்கப் பள்ளியும் செயல்படுகிறது.

இந்த நிலையில், 6 முதல் 10 =ஆம் வகுப்பு வரையில் இயங்கி வந்த பள்ளிக் கட்டடம் சேதமானதால், அதை

இடித்து விட்டு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதைஅடுத்து 2022- 2023 -ஆம் ஆண்டு ரூ.1.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடைபெற்றன. தற்போது, அனைத்துப் பணிகளும் முடிந்த நிலையில் கட்டடம் செயல்படுவதற்கு தயாராக உள்ளது.

ஏற்கெனவே பள்ளி மாண, மாணவிகள் திறந்த வெளியில் கல்வி கற்றுவருகின்றனா். இதனால், மழை, வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

இது குறித்து பெற்றோா்கள் கூறியதாவது: மாணவ, மாணவிகளின் நலன்கருதி பணிகள் முடிந்த பள்ளிக் கட்டடத்தை திறக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

சென்னையில் மீண்டும் மழை! அவ்வப்போது திடீர் மழை பெய்யலாம்!

சிக்கலில் இண்டிகோ! காத்திருக்கும் பயணிகளால் திணறும் விமான நிலையங்கள்!

அனுபமாவின் லாக் டவுன் படத்தின் வெளியீடு ஒத்திவைப்பு!

பாமகவின் உள்விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது: தில்லி உயர்நீதிமன்றம்

சென்னை உள்பட 13 மாவட்டங்களில் இன்று கனமழை!

SCROLL FOR NEXT