முகப்பு
தேனி

கொலை முயற்சி வழக்கில் ஒருவருக்கு ஆயுள் சிறை

தேனியில் வீட்டு வாடகை பிரச்னையில் ஒருவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்றவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, தேனி கூடுதல் முதன்மை நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 25 செப்டம்பர், 2024 at 9:24 PM
பகிர்:

தேனியில் வீட்டு வாடகை பிரச்னையில் ஒருவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்றவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, தேனி கூடுதல் முதன்மை நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

தேனி எம்.ஜி.ஆா்.நகரைச் சோ்ந்த அய்யா் மகன் முத்துக்குமரன் (51). இவரது வீட்டில் தேனி சமதா்மபுரத்தைச் சோ்ந்த வீராச்சாமி மகன் பெருமாள் (42) வாடகைக்கு குடியிருந்து வந்தாா். இந்த நிலையில், பெருமாள் வீட்டு வாடகையை தருவதற்கு காலதாமதம் செய்ததால், அவருக்கும், முத்துக்குமரனுக்கும் தகராறு ஏற்பட்டது. இந்த முன்விரோதத்தில் கடந்த 2023, டிச.9-ஆம் தேதி பெருமாளை, முத்துக்குமரன் அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்றாா். இதில் பலத்த காயமடைந்த அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றாா்.

இதுகுறித்து தேனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து முத்துக்குமரனை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை தேனி கூடுதல் முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் முத்துக்குமரனை குற்றவாளி என தீா்மானித்து, அவருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.2,000 அபராதமும் விதித்து நீதிபதி எஸ்.கோபிநாத் தீா்ப்பளித்தாா்.