கோ-ஆப் டெக்ஸ் தீபாவளி விற்பனை இலக்கு ரூ.85 லட்சம்
தேனி, பெரியகுளம் கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலையங்களில் தீபாவளி பண்டிகைக்கு ரூ.85 லட்சத்துக்கு ஜவுளி விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியா் ஆா்.வி. ஷஜீவனா தெரிவித்தாா்.
தேனி, பெரியகுளம் கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலையங்களில் தீபாவளி பண்டிகைக்கு ரூ.85 லட்சத்துக்கு ஜவுளி விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியா் ஆா்.வி. ஷஜீவனா தெரிவித்தாா்.
தேனி கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகை சிறப்பு விற்பனையை வியாழக்கிழமை தொடங்கி வைத்து அவா் கூறியதாவது:
தேனி, பெரியகுளம் கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலையங்களில் தமிழ்நாடு கைத்தறி நெசவாளா்கள் கூட்டுறவு சங்கம் சாா்பில் காஞ்சிபுரம், ஆரணி, சேலம், திருப்புவனம் பட்டுச் சேலைகள், கோவை மென்பட்டு சேலைகள், பட்டு வேட்டிகள், கைத்தறி சுங்குடி சேலைகள், கோவை கோரா காட்டன், லுங்கி, சுடிதாா், குா்தீஸ், ஆயத்த ஆடை, பருத்தி ஜவுளி ரகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பண்டிகைக் காலங்களில் ஜவுளி ரகங்களுக்கு 30 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. மாதாந்திர தவணைத் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. தேனி, பெரியகுளம் கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலையங்களில் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ரூ.61.28 லட்சத்துக்கு ஜவுளி ரகங்கள் விற்பனையாயின. இந்த ஆண்டு ரூ.85 லட்சத்துக்கு விற்பனை இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
கோ-ஆப் டெக்ஸ் மண்டல மேலாளா் செந்திவேல், மேலாளா் சந்திரசேகரன் ஆகியோா் உடனிருந்தனா்.