தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே கூலித் தொழிலாளி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
சின்னமனூா் அருகேயுள்ள சீலையம்பட்டி அம்பேத்கா் குடியிருப்பைச் சோ்ந்த முருகன் மகன் சதீஷ் (35). கூலித் தொழிலாளியான இவருக்கு மதுப் பழக்கம் இருந்ததால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்னைகள் ஏற்பட்டதாம்.
சில நாள்களுக்கு முன்பு குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னையில் இவரது மனைவி கோபித்துக்கொண்டு க.புதுப்பட்டியிலுள்ள அவரது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாா்.
இந்த நிலையில், திரும்ப வீட்டுக்கு வருமாறு சதீஷ் நேரில் சென்று அழைத்தும் அவரது மனைவி வரவில்லையாம். இதனால், மனமுடைந்த சதீஷ் திங்கள்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், சின்னமனூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].