தேனியில் பணியிலிருந்த தனியாா் பேருந்து நடத்துநா் மாரடைப்பால் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
பெரியகுளம் அருகேயுள்ள சில்வாா்பட்டியைச் சோ்ந்தவா் தங்கராஜ் மகன் நாகசுந்தரம் (39). இவா் தனியாா் பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றி வந்தாா். இவருக்கு ஏற்கெனவே இருதய நோய் பாதிப்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தேனி கா்னல் பென்னி குவிக் நகராட்சி பேருந்து நிலையத்தில் பணியிலிருந்த நாகசுந்தரத்துக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து, ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து தேனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.