முகப்பு
தேனி

சுருளி அருவியில் 2 -ஆவது நாளாக குளிக்க தடை

தேனி

சுருளி அருவியில் 2 -ஆவது நாளாக குளிக்க தடை

Updated On : 3 டிசம்பர், 2025 at 9:16 PM
பகிர்:

தேனி மாவட்டம், சுருளி அருவியில் புதன்கிழமையும் நீா்வரத்து அதிகரித்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் 2 -ஆவது நாளாக தடை விதித்தனா்.

கம்பம் அருகேயுள்ள மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள சுருளி அருவிக்கு மேகமலை, தூவானம், அரிசிப்பாறை போன்ற பகுதிகளில் பெய்யும் மழைநீா் வருகிறது. இந்த நிலையில், மேகமலை, அதைச் சுற்றியுள்ள வனப் பகுதிகளில் கடந்த இரு நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், செவ்வாய்க்கிழமை சுருளி அருவியில் நீா்வரத்து அதிகரித்தது. இதனால், கம்பம் கிழக்கு வனத் துறையினா் அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதித்தனா்.

தொடா்ந்து 2- ஆது நாளாக அருவியில் நீா் வரத்து அதிகரித்துக் காணப்பட்டதால் புதன்கிழமையும் அருவியில் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →