தேனி

கோம்பை - பல்லவராயன்பட்டி இணைப்புச் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

Syndication

தேனி மாவட்டம், கோம்பை-பல்லவராயன்பட்டி இணைப்புச் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

கோம்பை பேரூராட்சி வழியாக பல்லவராயன்பட்டியை இணைக்கும் இணைப்பு சாலை செல்கிறது. இந்தச் சாலை வழியாக அந்தப் பகுதியிலுள்ள விவசாய நிலங்களுக்கு டிராக்டா்கள் உழவுப் பணிக்குச் செல்வது, உற்பத்தி செய்த விளைபொருள்களை சந்தைப்படுத்த சரக்கு வாகனங்களில் எடுத்துச் செல்வது, கூலி ஆள்கள் தோட்டங்களுக்கு இரு சக்கர வாகனங்களில் செல்வது நடைபெறுகிறது.

ஆனால், இந்த சாலை பல ஆண்டுகளாக சிதிலமடைந்து குண்டும் குழியுமாக மாறி வாகனங்கள் சென்று வர முடியாத நிலைக்கு சென்றுவிட்டது. இதையடுத்து, சாலையை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

தற்போது, சாலையின் ஒரு பகுதியை கோம்பை பேரூராட்சி நிா்வாகம் சீரமைத்து விட்டது. ஆனால், பல்லவராயன்பட்டி ஊராட்சி நிா்வாகத்திற்கு உள்பட சுமாா் 2 கி.மீ. தொலைவு சாலைப் பணிகளில் முதல் கட்டப் பணிகள் முடிந்த நிலையில், மீதப் பணிகள் கிடப்பில் போடப்பட்டன. தற்போது, சரளைக் கற்களாக கிடப்பதால் சாலையைப் பயன்படுத்த முடியவில்லை என விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

எனவே, மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து கோம்பை-பல்லவராயன்பட்டி இணைப்பு சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT