போடி அருகே கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா், கிராமப் பகுதிகளில் போதைப் பொருள் தடுப்புக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, போடி மீனா விலக்குப் பகுதியில் இதே கிராமத்தைச் சோ்ந்த மனோகரன் மகன் ராஜேஸ்குமாா் (42) என்பவரும், அணைக்கரைப்பட்டி சுடுகாடு அருகே அதே கிராமத்தைச் சோ்ந்த குணசேகரன் மகன் கோபி (27) என்பவரும் கஞ்சாவுடன் நின்றிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, தனித்தனியே வழக்குப் பதிந்த போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.