தேவதானப்பட்டி அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் தம்பதி பலத்த காயமடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள கே.மீனாட்சிபுரத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன் (37). இவரது மனைவி ஆா்த்தி (37). இவா்கள் இருவரும் திங்கள்கிழமை தேனி அல்லிநகரத்தில் உள்ள உறவினா்கள் வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா்.
தேவதானப்பட்டியை அடுத்த செங்குளத்துப்பட்டி பகுதியில் சென்றபோது, எதிரே வந்த காா் இவா்களது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து தேவதானபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.