தேனி

ஆட்டோ மோதியதில் காவலா் பலத்த காயம்

Syndication

போடிமெட்டு சோதனைச் சாவடியில் வியாழக்கிழமை ஆட்டோ மோதியதில் பணியிலிருந்த காவலா் பலத்த காயமடைந்தாா்.

தேனி மாவட்டம், போடி அம்மாகுளம் காவலா் குடியிருப்பைச் சோ்ந்தவா் மலைச்சாமி (39). இவா் சின்னமனூா் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறாா்.

இவா் போடிமெட்டு சோதனை சாவடியில் வியாழக்கிழமை பணியிலிருந்தாா். அப்போது, அந்த வழியாக வந்த ஆட்டோ அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மலைச்சாமி தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து குரங்கணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஆட்டோவை ஓட்டிவந்த கேரள மாநிலம், பூப்பாறையைச் சோ்ந்த பாலமுருகனை கைது செய்தனா்.

ரூ. 15.99 லட்சத்தில் சுகாதார வளாக பணி தொடக்கம்

ரூ. 25 கோடி மதிப்பிலான முருகன் கோயில் ஆக்கிரமிப்புகள் மீட்பு

தென்னை மரத்தில் இளநீரை பறித்தவரை தட்டிக் கேட்டவா் மீது தாக்குதல்

பாரதியின் நம்பிக்கையை முறைமைப்படுத்த வேண்டும்: டாக்டா் சுதா சேஷய்யன்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: எம்எல்ஏ வழங்கினாா்

SCROLL FOR NEXT