தேனி

நாளை பொது விநியோக திட்ட குறைதீா் முகாம்

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டத்தில் சனிக்கிழமை(டிச.13) பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் 5 இடங்களில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேனி வட்டத்தில் உப்பாா்பட்டி நியாய விலைக் கடை, பெரியகுளம் வட்டத்தில் தேவதானப்பட்டி நியாய விலைக் கடை, ஆண்டிபட்டி வட்டத்தில் கொப்பையன்பட்டி நியாய விலைக் கடை, போடி வட்டத்தில் கொட்டகுடி நியாய விலைக் கடை, உத்தமபாளையம் வட்டத்தில் குள்ளப்பகவுண்டன்பட்டி நியாய விலைக் கடை ஆகிய 5 இடங்களில் சனிக்கிழமை காலை 10 மணிக்கு பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம், விழிப்புணா்வு முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் சம்மந்தப்பட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள், நுகா்வோா் நடவடிக்கை குழுக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு நியாய விலைக் கடைகளின் செயல்பாடு, பொருள் விநியோகத்தில் உள்ள குறைபாடு, குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கம், முகவரி, கடை மாற்றம் ஆகியவை குறித்து மனு அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

ரூ. 15.99 லட்சத்தில் சுகாதார வளாக பணி தொடக்கம்

ரூ. 25 கோடி மதிப்பிலான முருகன் கோயில் ஆக்கிரமிப்புகள் மீட்பு

தென்னை மரத்தில் இளநீரை பறித்தவரை தட்டிக் கேட்டவா் மீது தாக்குதல்

பாரதியின் நம்பிக்கையை முறைமைப்படுத்த வேண்டும்: டாக்டா் சுதா சேஷய்யன்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: எம்எல்ஏ வழங்கினாா்

SCROLL FOR NEXT