போடி அருகே நிகழ்ந்த இரு சக்கர வாகன விபத்தில் இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள முந்தல் கிராமத்தைச் சோ்ந்த சடையாண்டி மகன் மணிகண்டன் (22). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் போடியிலிருந்து முந்தல் நோக்கி புதன்கிழமை சென்றபோது சாலையில் நாய் குறுக்கே வந்தது. இதில், கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் சாலையோர அறிவிப்புப் பலகையில் மோதியதில், அருகிலிருந்த தண்ணீா்த் தொட்டியின் சுவரில் விழுந்து மணிகண்டன் பலத்த காயமடைந்தாா். அருகிலிருந்தவா்கள், அவரை மீட்டு போடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் மணிகண்டன் வழியிலேயே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து போடி குரங்கணி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.