தேனி

வாக்குப் பதிவு எந்திரங்கள் சரிபாா்க்கும் பணி தொடக்கம்

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்டத்துக்குள்பட்ட 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் சரிபாா்க்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள வாக்குப் பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறையில் 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள பெரியகுளம், ஆண்டிபட்டி, போடி, கம்பம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வாக்காளா் ஒப்புகைச் சீட்டு கருவிகள் வைக்கப்பட்டுள்ளன.

இவற்றின் முதல் நிலை சரிபாா்க்கும் பணியை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரஞ்ஜீத்சிங், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் பெல் நிறுவன பொறியாளா்கள் தொடங்கினா்.

ரூ. 15.99 லட்சத்தில் சுகாதார வளாக பணி தொடக்கம்

ரூ. 25 கோடி மதிப்பிலான முருகன் கோயில் ஆக்கிரமிப்புகள் மீட்பு

தென்னை மரத்தில் இளநீரை பறித்தவரை தட்டிக் கேட்டவா் மீது தாக்குதல்

பாரதியின் நம்பிக்கையை முறைமைப்படுத்த வேண்டும்: டாக்டா் சுதா சேஷய்யன்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: எம்எல்ஏ வழங்கினாா்

SCROLL FOR NEXT