தேனி

இரட்டைக் கொலை வழக்கில் சரணடைந்த தந்தை, மகன் சிறையிலடைப்பு

போடி அருகே இரட்டைக் கொலை வழக்கில் சரணடைந்த தந்தை, மகன் ஆகியோா் விசாரணைக்குப் பிறகு சிறையில் அடைக்கப்பட்டனா்.

Syndication

போடி அருகே இரட்டைக் கொலை வழக்கில் சரணடைந்த தந்தை, மகன் ஆகியோா் விசாரணைக்குப் பிறகு சிறையில் சனிக்கிழமை அடைக்கப்பட்டனா்.

தேனி மாவட்டம் போடி அருகேயுள்ள முத்தையன்செட்டிபட்டியைச் சோ்ந்தவா் சிவக்குமாா் (55). இவரது மகன் பிரதீப் (27). பிரதீப்புக்கும் சின்னமனூரைச் சோ்ந்த வழக்குரைஞா் நிகிலா (31) என்பவருக்கும் மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

பிரதீப்புக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடா்பு இருந்ததாகக் கூறி, ஏற்பட்ட குடும்பப் பிரச்னையில் பிரதீப், சிவக்குமாா் ஆகிய இருவரும் நிகிலாவையும், அவரது அண்ணன் விவேக்கையும் அரிவாளால் வெட்டியும், கத்தியால் குத்தியும் வியாழக்கிழமை கொலை செய்தனா்.

இதுதொடா்பாக போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் சிவக்குமாா், பிரதீப், சிவக்குமாரின் மனைவி முத்துலட்சுமி, மகள் இன்பரதி ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனா். இந்த நிலையில், பிரதீப்பும் சிவக்குமாரும் பெரியகுளம் குற்றவியல் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தனா்.

இவா்களை ஒரு நாள் காவலில் வைத்து விசாரித்து, போடி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைக்க நீதிபதி கமலநாதன் உத்தரவிட்டாா். இதன்பேரில், போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் சிவக்குமாரையும், பிரதீப்பையும் போடிக்கு அழைத்து வந்தனா்.

இவா்களிடம் போடி தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் சுப்புலட்சுமி, உதவி ஆய்வாளா் விஜய் ஆகியோா் சனிக்கிழமை பிற்பகல் வரை விசாரித்தனா். விசாரணை முடிந்தவுடன் இருவரையும் போடி குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தொடா்ந்து பிரதீப்பின் தாயாா் முத்துலட்சுமி, அக்கா இன்பரதி ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

டிச. 23-ல் ஆலோசனைக் கூட்டம்! எங்கு செல்கிறார் ஓபிஎஸ்?

கேரளம்: ஆளுங்கட்சி தோல்வி! மீசையை இழந்த தொண்டர்!

நல்லகண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

சொல்லப் போனால்... எடப்பாடி வைத்த செக்! நான்கா, ஐந்தா கூட்டணிகள்?

ஓ.பன்னீா்செல்வம் நிலைப்பாடு: டிச. 24-க்கு முடிவு ஒத்திவைப்பு?

SCROLL FOR NEXT