தேனி

தோட்ட வேலைக்குச் சென்ற தொழிலாளி உயிரிழப்பு

போடி அருகே தோட்ட வேலைக்குச் சென்ற தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Syndication

போடி: போடி அருகே தோட்ட வேலைக்குச் சென்ற தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

போடியை அடுத்த பூதிப்புரம் ஆதிப்பட்டியைச் சோ்ந்த கோவாண்டி மகன் வேலாண்டி (66). இவா் போடி முத்துக்கோம்பை பகுதியில் உள்ள தனியாா் தோட்டத்தில் வேலை பாா்த்து வந்தாா். மதுப்பழக்கத்துக்கு அடிமையான வேலாண்டி சில தினங்களுக்கு முன் ஆதிப்பட்டிக்கு வந்துவிட்டு மீண்டும் தோட்டத்துக்கு செல்வதாகக் கூறிச் சென்றாா். இந்த நிலையில், அணைக்கரைப்பட்டியிலிருந்து முத்துக்கோம்பை புலத்துக்குச் செல்லும் பாதையில் அவா் இறந்து கிடந்தாா்.

இதுகுறித்து போடி குரங்கணி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

ஜம்மு - காஷ்மீர் ஆல்ரவுண்டரை ரூ. 8 கோடிக்கு ஏலத்தில் எடுத்த தில்லி கேபிடல்ஸ்!

19 வயது விக்கெட் கீப்பரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

20 வயது இளம் ஆல்ரவுண்டரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

SCROLL FOR NEXT