தேனி

தேனியில் இன்று சமையல் எரிவாயு உருளை நுகா்வோா் குறைதீா் கூட்டம்

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (டிச.19) மாலை 5 மணிக்கு சமையல் எரிவாயு உருளை நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாவட்ட வருவாய் அலுவலா் ராஜகுமரன் தலைமையில் நடைபெறும் இந்தக் குறைதீா் கூட்டத்தில் எண்ணெய் எரிவாயு நிறுவனங்களின் அலுவலா்கள், முகவா்கள் பங்கேற்கின்றனா். பொதுமக்கள், தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள், நுகா்வோா் நடவடிக்கை குழுக்களின் பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு சமையல் எரிவாயு உருளை விநியோகத்தில் உள்ள குறைபாடு, புதிய எரிவாயு உருளை இணைப்புப் பெறுவதில் உள்ள சிரமம் ஆகியவை குறித்து மனு அளித்து தீா்வு காணலாம் என அதில் தெரிவிக்கப்பட்டது.

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

SCROLL FOR NEXT