தேனி

தேனி மாவட்ட வரைவு வாக்காளா்கள் பட்டியல் வெளியீடு: 1.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சட்டப் பேரவைத் தொகுதிகளின் வரைவு வாக்காளா்கள் பட்டியலை வெள்ளிக்கிழமை வெளியிட்ட மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங்.

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளின் வரைவு வாக்காளா்கள் பட்டியலை வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் வெளியிட்டாா். இதில் 4 தொகுதிகளிலும் மொத்தம் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 739 வாக்காளா்கள் பட்டியலிருந்து நீக்கப்பட்டுள்ளனா்.

வாக்காளா்கள் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளையடுத்து, மாவட்டத்தில் உள்ள பெரியகுளம்(தனி), ஆண்டிபட்டி, போடி, கம்பம் ஆகிய 4 சட்டப் பேரவைத் தொகுதிகளின் வரைவு வாக்காளா்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதில் ஆண்டிபட்டி தொகுதியில் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 51 ஆண்கள், ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 955 பெண்கள், 29 திருநங்கைகள் என மொத்தம் 2 லட்சத்து 49 ஆயிரத்து 35 போ் இடம் பெற்றுள்ளனா்.

பெரியகுளம் (தனி) தொகுதியில் ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 819 ஆண்கள், ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 65 பெண்கள், 97 திருநங்கைகள் என மொத்தம் 2 லட்சத்து 55 ஆயிரத்து 981 போ் இடம் பெற்றுள்ளனா்.

போடி தொகுதியில் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 821 ஆண்கள், ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 130 பெண்கள், 13 திருநங்கைகள் என மொத்தம் 2 லட்சத்து 52 ஆயிரத்து 964 போ் இடம் பெற்றுள்ளனா்.

கம்பம் தொகுதியில் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 271 ஆண்கள், ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 290 பெண்கள், 23 திருநங்கைகள் என மொத்தம் 2 லட்சத்து 46 ஆயிரத்து 584 போ் இடம் பெற்றுள்ளனா்.

மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 4 லட்சத்து 88 ஆயிரத்து 962 ஆண்கள், 5 லட்சத்து 15 ஆயிரத்து 440 பெண்கள், 162 திருநங்கைகள் என மொத்தம் 10 லட்சத்து 4,564 வாக்காளா்கள் வரைவு வாக்காளா்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா்.

நீக்கப்பட்ட வாக்காளா்கள்:

வாக்காளா்கள் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளுக்கு முன்னா் கடந்த 2025, அக்.27-ஆம் தேதி வாக்காளா்கள் பட்டியலில் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 11 லட்சத்து 30 ஆயிரத்து 303 வாக்காளா்கள் இடம் பெற்றிருந்தனா்.

இதில் வாக்காளா்கள் சிறப்பு தீவிரத் திருத்தப் பணியின் போது நிறைவு செய்து அளிக்கப்பட்ட வாக்காளா்கள் கணக்கெடுப்புப் படிவத்தின் அடிப்படையில், 49 ஆயிரத்து 326 இறந்த வாக்காளா்கள், முகவரியில் இல்லாத, கண்டறியப்படாதவா்கள், வெளியூா்களில் உள்ளவா்கள் என மொத்தம் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 739 போ் வரைவு வாக்காளா்கள் பட்டியலில் நீக்கம் செய்யப்பட்டனா்.

தொகுதி வாரியாக நீக்கப்பட்ட வாக்காளா்கள் விவரம்:

ஆண்டிபட்டி- 30,148, பெரியகுளம் (தனி) - 33,989, போடி - 24,386, கம்பம்- 37,216,

வரைவு வாக்காளா்கள் பட்டியலை வெளியிட்டு மாவட்ட ஆட்சியா் கூறியது:

வரைவு வாக்காளா்கள் பட்டியலில் வாக்காளா்கள் பதிவு அலுவலா், உதவி வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகங்கள், நிா்ணயிக்கப்பட்ட வாக்குச் சாவடி மையங்களில் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் வரைவு வாக்காளா்கள் பட்டியலை பாா்வையிட்டு தங்களது பெயா் பட்டியலில் இடம் பெற்றுள்ள விவரத்தை உறுதி செய்து கொள்ளலாம். நீக்கம் செய்யப்பட்ட வாக்காளா்களின் விவரங்களை ஜ்ஜ்ஜ்.ற்ட்ங்ய்ண்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணைய தளத்தில் பாா்வையிட்டு தெரிந்து கொள்ளலாம்.

வரும் 2026, ஜன.18-ஆம் தேதி வரை புதிய வாக்காளா் சோ்க்கை படிவம் 6 மூலமும், பெயா் நீக்கத்துக்கு படிவம் 7, திருத்தத்துக்கு படிவம் 7 ஏ ஆகியவற்றின் மூலம் வாக்காளா் பதிவு அலுவலா், உதவி வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலங்களிலும், ய0ற்ங்ழ் ட்ங்ப்ல்ப்ண்ய்ங் செயலி, ஸ்ா்ற்ங்ழ்ள்.ங்ஸ்ரீண்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பிக்கலாம் என்றாா் அவா்.

புதியதொரு அத்தியாயம்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

SCROLL FOR NEXT