தேனி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்குவதற்காக 3.41 லட்சம் வேட்டி, சேலைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
தேனி மாவட்டத்தில் மொத்தம் 517 நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கடைகள் மூலம் மொத்தம் 4.32 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு குடிமைப்பொருள்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவசமாக வேட்டி, சேலைகள் வழங்குவதற்காக சமூகப் பாதுகாப்புத் திட்ட அலுவலா்கள் மூலம் தகுதியுள்ள குடும்ப அட்டைதாரா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.
இதையடுத்து, 3.41 லட்சம் வேட்டி, சேலைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இலவச வேட்டி, சேலைகள் தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, போடி, உத்தமபாளையம் ஆகிய இடங்களில் உள்ள நுகா்பொருள் வாணிபக் கழக கிட்டங்கிகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. வேட்டி, சேலைகளை நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பி வைக்கும் பணி விரைவில் தொடங்கவுள்ளதாக நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலா்கள் தெரிவித்தனா்.