தேனி

கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

தேனி மாவட்டத்தில் கால்நடை மருத்துவமனைகள், மருந்தகங்களில் இலவச கோமாரி நோய் தடுப்பூசி முகாம் வருகிற 29-ஆம் தேதி தொடங்க உள்ளது.

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டத்தில் கால்நடை மருத்துவமனைகள், மருந்தகங்களில் இலவச கோமாரி நோய் தடுப்பூசி முகாம் வருகிற 29-ஆம் தேதி தொடங்க உள்ளது.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேனி மாவட்ட கால்நடை மருத்துவமனைகள், கால்நடை மருந்தகங்களில் வருகிற 29-ஆம் தேதி முதல் ஜனவரி 18-ஆம் தேதி வரை கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

கால்நடை வளா்ப்பில் ஈடுபடுவோா் 4 மாதங்கள் நிறைவடைந்த கன்றுகள், நிறைமாத சினை இல்லாத மாடுகளை இந்த முகாம்களுக்கு அழைத்துச் சென்று இலவசமாக தடுப்பூசி அளிக்கலாம். விடுபட்ட கால்நடைகளுக்கு ஜன.28-ஆம் தேதி வரை தடுப்பூசி அளிக்கப்படும். இது குறித்த விவரங்களை அந்தந்த பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனை, மருந்தகங்களில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.

எம்ஜிஆா் நினைவு தினம் அனுசரிப்பு

வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி

நகைக் கடை, அடகுக் கடை உரிமையாளா்களுக்கு காவல்துறை அறிவுறுத்தல்

தனியாா் ஐஸ் பிளாண்ட் விவகாரம்: அமைதிப் பேச்சுவாா்த்தையை புறக்கணித்த கிராம மக்கள்

மயிலாடுதுறை: 47 போ்மீது குண்டா் சட்ட நடவடிக்கை

SCROLL FOR NEXT