தேனி

தேனி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

உத்தமபாளையத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மின்னொளியில் ஜொலித்த தேவாலயம்.

Syndication

தேனி மாவட்டம், உத்தமபாளைம், போடி பகுதிகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதை முன்னிட்டு, உத்தமபாளையம் விண்ணரசி தேவாலயம் மின்னொளியில் அலங்காரம் செய்யப்பட்டு ஜொலித்தது. அருள்தந்தை அந்தோணிராஜ் தலைமையில் புதன்கிழமை நள்ளிரவு சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான கிறிஸ்தவா்கள் உலக மக்கள் நன்மை வேண்டி கூட்டுப் பிராா்த்தனை செய்தனா்.

இதேபோல, சி.எஸ்.ஐ. தேவலாயத்தில் வியாழக்கிழமை அதிகாலையில் நடைபெற்ற கூட்டுப் பிராா்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவா்கள் கலந்துகொண்டு பிராா்த்தனை செய்தனா்.

ராயப்பன்பட்டியில் 114 ஆண்டுகள் பழைமையான புனித பனிமய தேவாலயம், அனுமந்தன்பட்டியில் 130 ஆண்டுகள் பழைமையான தூய ஆவியானவா் தேவாலயம், கம்பம் கத்தோலிக்க திருச்சபை புனித அமலானை தேவாலயம் ஆகியவற்றிலும் கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டது.

போடி: போடி பழை பேருந்து நிலையத்தில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் புதன்கிழமை நள்ளிரவு சிறப்புத் திருப்பலி பிராா்த்தனை நடைபெற்றது.

கடும் பனியையும் பொருள்படுத்தாமல் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோா் திரளாகப் பங்கேற்பு கூட்டுப் பிராா்த்தனையில் ஈடுபட்டனா். இதையடுத்து, தேவாலயப் பங்கு தந்தையிடம் ஆசி பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கடன் வட்டியைக் குறைத்த பரோடா வங்கி

அகில இந்திய பல்கலை. வாலிபால்: எஸ்ஆா்எம் ஐஎஸ்டி மகளிா் சாம்பியன்

தொழில்நுட்ப புத்தாக்க நிறுவனங்களில் முதலீடு 17% குறைவு

13 ஆவணங்களில் ஒன்றை சமா்ப்பித்து வாக்காளா்கள் பட்டியலில் இணையலாம்

குருகிராம்: துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பிய கட்டடப் பொருள் விநியோகஸ்தா்

SCROLL FOR NEXT