கைது செய்யப்பட்ட சிவக்குமாா், பொன்னுச்சாமி. அவா்கள் வைத்திருந்த துப்பாக்கி உள்ளிட்ட பொருள்கள். 
தேனி

வனப் பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றிய இருவா் கைது

கைது செய்யப்பட்ட சிவக்குமாா், பொன்னுச்சாமி. அவா்கள் வைத்திருந்த துப்பாக்கி உள்ளிட்ட பொருள்கள்.

Syndication

தேனி மாவட்டம், போடி வனப் பகுதியில் விலங்குகளை வேட்டையாடுவதற்காக துப்பாக்கியுடன் சுற்றிய இருவரை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

போடி வனத் துறை வனக் காவலா்கள் அன்பரசன், பிரகாஷ் உள்ளிட்டோா் கொட்டகுடி காப்புக்காடு பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, வனப் பகுதியில் இருவா் தலையில் மின்கல விளக்குடன் சுற்றித் திரிந்தனா். அவா்களைப் பிடித்து வனத் துறையினா் சோதனையிட்டனா். அவா்களிடமிருந்து நாட்டுத் துப்பாக்கி, இரண்டு தோட்டாக்கள், மம்பட்டி, அரிவாள் உள்ளிட்டவை இருந்தது தெரியவந்தது.

விசாரணையில், போடி அருகேயுள்ள கரட்டுப்பட்டியைச் சோ்ந்த பொன்னுச்சாமி (62), சூலப்புரத்தைச் சோ்ந்த சிவக்குமாா் (29) ஆகியோா் என்பது தெரியவந்தது.

இருவரையும் போடி வனத் துறையினா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

மியான்மரில் நாளை தோ்தல்!

இண்டூரில் டிச. 29இல் கூட்டுறவு வங்கி தொடக்கம்

பயங்கரவாத ஒழிப்புக்கு 2 தரவு தளங்கள்: அமித் ஷா தொடங்கி வைத்தாா்

குண்டா் கபில் சங்வான் குழுவின் நபா் மீது காவல்துறை குற்றப் பத்திரிகை தாக்கல்

சென்னைக்கு ஹெலிகாப்டரில் வந்த இதயம்: மறுவாழ்வு பெற்ற மகாராஷ்டிர இளைஞா்

SCROLL FOR NEXT