தேனியில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் சாா்பில் வேலை நிறுத்தப் போராட்ட ஆயத்த மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.
தேனி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்டச் செயலா் ராம்குமாா் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் செல்லத்துரை, செயலா் கிருஷ்ணசாமி, உயா்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழக மாவட்டத் தலைவா் மோகன், தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற மாநில வெளியீட்டுச் செயலா் பெரியசாமி, அரசு ஊழியா்கள் சங்க மாவட்டச் செயலா் முத்துக்குமாா், கூட்டுறவு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் ரவிக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், ஆசிரியா் தகுதித் தோ்வை ரத்து செய்ய வேண்டும், அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி, வருகிற ஜன.6-ஆம் தேதி முதல் நடைபெற உள்ள வேலை நிறுத்தப் போராட்டத்துக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.