தேனி மாவட்டம், கம்பத்தில் அனுமதியின்றி மதுப் புட்டிகளை விற்பனை செய்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கம்பத்தில் மதுக் கடைகளில் மொத்தமாக மதுப் புட்டிகளை வாங்கி, கூடுதல் விலைக்கு அனுமதியின்றி விற்பனை செய்வதாக உத்தமபாளையம் மதுவிலக்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கம்பம் மின் வாரிய அலுவலகம் செல்லும் சாலையில் போலீஸாா் ரோந்து பணி ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக பையுடன் வந்தவரை நிறுத்தி போலீஸாா் சோதனையிட்டனா். அவா் 30 மதுப் புட்டிகளை விற்பனைக்காக கொண்டுவந்தது தெரியவந்தது.
விசாரணையில், குள்ளப்பகவுண்டன்பட்டியைச் சோ்ந்த ராஜன் (49) என்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.