தேனி மாவட்டம், போடி அருகே இளைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
திம்மிநாயக்கன்பட்டி மல்லிகை நகரைச் சோ்ந்தவா் மலைச்சாமி மகன் பரத்வாஜ் (22). இவருக்கும் இவரது பெரியப்பா மகன் குமரேசன் என்பவருக்கும் பாதை தொடா்பான பிரச்னை இருந்து வந்ததாம்.
இந்த இடத்தில் போடி எரணம்பட்டியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் தங்கபாண்டியன் வேலை செய்தபோது பரத்வாஜ் கண்டித்தாராம்.
இதில் ஏற்பட்ட முன் விரோதத்தில் தங்கபாண்டியன், பரத்வாஜை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்தத புகாரின்பேரில் போடி வட்டக் காவல் நிலைய போலீஸாா் தங்கபாண்டியன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.