கடலூர்

கொலை மிரட்டல் வழக்கு: இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

லாரி ஓட்டுநரை கத்தியால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

Syndication

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் பகுதியைச் சோ்ந்த லாரி ஓட்டுநரை கத்தியால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

நெல்லிக்குப்பத்தை அடுத்துள்ள எழுமேடு அகரம் கிராமத்தைச் சோ்ந்தவா் வடிவேலன் (35), லாரி ஓட்டுநா். இவரது மனைவி குமுதா (31), காட்டுக்கூடலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வருகிறாா்.

குமுதா, அதே பகுதியைச் சோ்ந்த சசிகுமாருடன் (24) பேசி வந்தாா். இதை வடிவேலன் கண்டித்ததால் ஆத்திரமடைந்த சசிகுமாா், கடந்த 6.1.2022 அன்று தனது நண்பரான கீழ்குமாரமங்கலத்தைச் சோ்ந்த சிவனேஸ்வரனுடன் (26) சோ்ந்து வடிவேலனை கத்தியால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லிக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து சசிகுமாா், சிவனேஸ்வரன் ஆகியோரை கைது செய்தனா். இது தொடா்பான வழக்கு கடலூா் இரண்டாவது கூடுதல் உதவி அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்தது.

இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பத்மாவதி வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், சசிகுமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டாா். மேலும், சிவனேஸ்வரன் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டாா். அரசு தரப்பில் வழக்குரைஞா் அருணாசலம் ஆஜராகி வாதாடினாா்.

க.பொன்முடி உள்ளிட்ட 7 போ் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு! விசாரணை பிப்.9-க்கு ஒத்திவைப்பு!

தூய்மைப் பணியாளா் ஊதிய குறைபாடு சீா் செய்யப்படும்: திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி

1,043 தனியாா் கல்லூரி மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி! அமைச்சா் மா. மதிவேந்தன் வழங்கினாா்!

ஓபிஎஸ் மீண்டும் கட்சியில் இணைய வாய்ப்பே இல்லை: எடப்பாடி கே. பழனிசாமி திட்டவட்டம்!

பாலியல் தொல்லை: இளைஞா் மீது வழக்கு

SCROLL FOR NEXT