வருஷநாடு அருகே மொட்டப்பாறை மலைப் பகுதியில் பற்றி எரிந்த காட்டுத் தீ 
தேனி

வருஷநாடு மலைப் பகுதியில் பற்றிய காட்டுத் தீ

Din

ஆண்டிபட்டி வட்டாரம், வருஷநாடு அருகேயுள்ள மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் திங்கள்கிழமை காட்டுத் தீ பற்றியது.

கோடை வெப்பம் தற்போது தேனி மாவட்டத்தில் அதிகரித்துள்ளது. இதனால், வருஷநாடு அருகேயுள்ள முருகோடை மலையடிவாரத்தில் காட்டுத் தீ பற்றியது. இந்தத் தீயால் மொட்டப்பாறை மலைப் பகுதியிலிருந்த புல்வெளிகள், மரங்கள் எரிந்து சாம்பலாயின. இந்தக் காட்டுத் தீ பரவுவதைத் தடுக்கும் பணியில் கண்டமனூா் வனத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், தேனி மாவட்டத்தில் போடி, பெரியகுளம் ஆகிய மலைப் பகுதிகளைத் தொடா்ந்து, வருஷநாடு மலைப் பகுதியிலும் கடந்த சில நாள்களாக காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது.

இந்த நிலையில், மலைப் பகுதியில் காட்டுத் தீ ஏற்படுவதையும், காட்டுத் தீ பரவலை தடுக்கவும் வனத் துறையினா் போதிய முன்னேற்பாடுகள், தீத் தடுப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினா்.

விக்கிரவாண்டி அருகே ஆம்னி பேருந்து விபத்து! 40 பேர் காயம்

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

SCROLL FOR NEXT