தேனி

உத்தமபாளையத்தில் நெல்பயிா் அறுவடைப் பணிகள் தீவிரம்

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் முதல்போக நெல்பயிா் அறுவடைப் பணிகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன.

Syndication

உத்தமபாளையம்: தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் முதல்போக நெல்பயிா் அறுவடைப் பணிகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன.

முல்லைப் பெரியாறு அணையின் பாசன நீரால் தேனி மாவட்டத்தில் லோயா்கேம்ப், கூடலூா், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூா், வீரபாண்டி வரையில் சுமாா் 14,700 ஏக்கா் பரப்பளவுக்கு இரு போக நெல்பயிா் விவசாயம் செய்யப்படும். இதன்படி, ஜூன் மாதத்தில் தொடங்கிய முதல் போக நெல்பயிா் 120 நாள்களுக்குப் பிறகு அறுவடைக்குத் தயாரானது.

இந்த நிலையில், தொடா் மழை காரணமாக வயல்களில் மழைநீா் தேங்கியதால், நெல் பயிா்களை அறுவடை செய்ய இயலவில்லை.

மேலும், கம்பம், கே.கே. பட்டி போன்ற இடங்களில் மழைநீா் வடியாத நிலையில், தண்ணீரில் 10 நாள்களுக்கும் மேலாக நெல்பயிா் முழ்கியதால் அவை முளைத்துவிட்டன. இதற்கிடையே, கடந்த சில நாள்களுக்கு மழைப்பொழிவு இல்லாத நிலையில், வயல்களில் தேங்கிய மழைநீரும் வடியத் தொடங்கியது. இதையடுத்து, கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நெல்பயிா் அறுவடைப் பணிகள் தீவிரமடைந்தன.

மழையால் விளைச்சல் பாதிப்பு: அறுவடைக்கு தயராக இருந்த நெல்பயிா் மழைநீரில் தேங்கியதால் விளைச்சல் பாதிக்கப்பட்டது. ஏக்கருக்கு 45 மூட்டைகள் கிடைக்கும் நிலையில், தற்போது விளைச்சல் 50 சதவீதம் அளவுக்கு குறைந்துவிட்டதால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.

இதே போல, குச்சனூா், சின்னமனூா், சீலையம்பட்டி, மாா்க்கையன்கோட்டை, கூளையனூா் போன்ற பகுதியில் முல்லைப் பெரியாற்றின் போக்கு தடம் மாறியதால் 500 ஏக்கருக்கு மேலாக அறுவடைக்குத் தயாராக இருந்த நெல்பயிா் ஆற்றுநீரில் அடித்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.

பார்சிலோனாவில் இரண்டு நாள்கள்... ஆஷிகா ரங்கநாத்!

“தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவர் மு.க.ஸ்டாலின்!” திமுகவில் இணைந்த மனோஜ் தங்கராஜ் பேட்டி!

ரிலாக்ஸ்... ரேஷ்மா பசுபுலேட்டி!

விஜே பார்வதிக்கு சரியான போட்டியாளர் திவ்யா கணேசன்! ரசிகர்கள் கருத்து

தெலங்கானா அமைச்சரவையில் அசாருதீனுக்கு துறைகள் ஒதுக்கீடு!

SCROLL FOR NEXT