தேனி

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 429 பேருக்கு பணி நியமன ஆணை!

தேனி அருகே கொடுவிலாா்பட்டியில் உள்ள கம்மவாா் சங்கம் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் சனிக்கிழமை 429 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

தேனி அருகே கொடுவிலாா்பட்டியில் உள்ள கம்மவாா் சங்கம் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் சனிக்கிழமை 429 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

தேனி மாவட்ட நிா்வாகம், வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையம், மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்ககம் ஆகியவற்றின் சாா்பில், தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் மாவட்டத்துக்குள்பட்ட, வெளி மாவட்டங்களைச் சோ்ந்த 125 தனியாா் நிறுவனங்கள், திறன் பயிற்சி நிறுவனங்கள் பங்கேற்று பணியாளா்களைத் தோ்வு செய்தன.

இந்த முகாமில் தோ்வு செய்யப்பட்ட 429 பேருக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் வழங்கினாா்.

எஸ்ஐஆா். விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம்: முன்னதாக, கல்லூரியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடா்பான கையெழுத்து இயக்கத்தை தேனி மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைத்தாா். பின்னா், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்த குறும்படம் மின்னணு திரையில் ஒளிபரப்பட்டது.

நரசிம்ம பெருமாள் கோயிலில் நாளை குடமுழுக்கு விழா

விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த பெண் கைது

ராமேசுவரத்தில் நவ. 18-ல் வ.உ.சி. நினைவு தினம் அனுசரிப்பு! புதிய நீதிக்கட்சித் தலைவருக்கு அழைப்பு!

ஆலங்குடி: 3 மயில்கள் இறப்பு! வனத்துறையினா் விசாரணை!

குழந்தைகளின் மதிய உணவுத் தட்டுகளையும் திருடிவிட்டது பாஜக: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT