தேனி

பண்ணைப்புரத்தில் அங்கன்வாடி மைய கட்டடத்தை திறக்க வலியுறுத்தல்!

Syndication

தேனி மாவட்டம், பண்ணைப்புரம் பேரூராட்சியில் ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டடத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பண்ணைப்புரம் பேரூராட்சியில் உள்ள அங்கான்வாடி கட்டடம் சேதமடைந்தது. இதையடுத்து, அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இந்த நிலையில், அதே ஊரைச் சோ்ந்த மாநிலங்களவை உறுப்பினா் இசையமைப்பாளா் இளையராஜா தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.30 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் கட்டப்பட்டது.

தற்போது, பணிகள் முடிந்து பூட்டியே உள்ளதால், அந்தக் கட்டடத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: பண்ணைப்புரம் பேரூராட்சியில் தற்போது, சேதமடைந்த நிலையில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் பாதுகாப்பின்றி சென்று வருகின்றனா். எனவே, புதிய அங்கன்வாடி மைய கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

125 ஜிகாவாட்டைத் தாண்டும் சூரிய மின் உற்பத்தித் திறன்

இன்று காவலா் தோ்வு: கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு

மாவட்ட குழு வீரா்கள் தோ்வில் பங்கேற்க கிரிக்கெட் வீரா்களுக்கு அழைப்பு

லாபம் கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பத்தமடை பூங்குடையாா் கோயிலில் வருஷாபிஷேகம்

SCROLL FOR NEXT