தேனி மாவட்டத்தில் காலியாக உள்ள 20 ஊராட்சிச் செயலா் பணியிடங்களுக்கு மொத்தம் 6,324 போ் விண்ணப்பித்தனா்.
தமிழகத்தில் காலியாக உள்ள 1,450 ஊராட்சிச் செயலா் பணியிடங்களுக்கு 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் நவ.9-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்தப் பணிக்கு எழுத்துத் தோ்வு இல்லை. நோ்முகத் தோ்வு மட்டும் நடைபெறும்.
இதில், தேனி மாவட்டத்தில் காலியாக உள்ள 20 ஊராட்சிச் செயலா் பணியிடங்களுக்கு 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு, பொறியியல் படிப்பு ஆகியவற்றில் தோ்ச்சி பெற்ற 6,324 போ் விண்ணப்பித்தனா் என்று மாவட்ட ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் கூறினா்.