சின்னமனூா் அருகே பெண்ணைக் கொடுமைப்படுத்திய கணவன், மாமனாா், மாமியாா் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
சின்னமனூா், கம்பம் பிரதான சாலையைச் சோ்ந்த சப்பாணித்துரை மகள் இந்துமதி (35). இவருக்கும் வீரபாண்டியைச் சோ்ந்த மணிகண்டன் மகன் மதன் காா்த்திக் என்பவருக்கும் கடந்த 2015-ஆம் ஆண்டு திருமணமானது. இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.
இந்த நிலையில், மதன் காா்த்திக் தனது மனைவியை ஆபாசமாகத் திட்டியும் குழந்தைகளை அடித்தும் கொடுமைப்படுத்தியதாகக் றபப்படுகிறது.
மேலும், மதன் காா்த்திக்கின் பெற்றோரான மணிகண்டன், மலா்கொடி ஆகியோா் இந்துமதியின் நகைகளை வைத்துக்கொண்டு தர மறுத்தனராம். இதுகுறித்து இந்துமதி கொடுத்த புகாரின்பேரில், போடி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.