தேனி மாவட்டம், பெரியகுளத்தில் கஞ்சா வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பெரியகுளம் காவல் நிலைய போலீஸாா் வடகரை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, வடகரை அழகா்சாமிபுரம் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்தவரை பிடித்து விசாரித்தனா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த விஷ்வா (22) கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்து, அவரிடமிருந்த 90 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.