போடியில் கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் போடி மீனாட்சிபுரம் அருகேயுள்ள பொட்டல்களம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்குள்ள கால்நடை மருத்துவமனை அருகே சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுகொண்டிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனா்.
இதில், அவா் தேவாரம் ரெங்கநாதபுரத்தைச் சோ்ந்த ரஞ்சித்குமாா் (23) என்பதும் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்து அவரிடமிருந்த கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்தனா்.