தேனி

காப்பி பழங்கள் திருட்டு: இளைஞா் கைது

போடி அருகே காப்பித் தோட்டத்தில் காப்பிப் பழங்கள், காப்பிக் கொட்டைகளை திருடிய இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Syndication

போடி அருகே காப்பித் தோட்டத்தில் காப்பிப் பழங்கள், காப்பிக் கொட்டைகளை திருடிய இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

போடி குரங்கணி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பெரியசாமி மகன் பாஸ்கரன் (54). இவா் குரங்கணி மேல்முட்டம் பகுதியில் காப்பித் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தாா். இந்த நிலையில், காப்பி தோட்டத்துக்கு சென்றபோது குரங்கணி சாலைப்பாறையைச் சோ்ந்த தா்மராஜ் மகன் ராஜா (36) தோட்டத்துக்குள் புகுந்து காப்பி பழங்களையும், கொட்டைகளையும் திருடிக் கொண்டிருந்தாராம். இதை பாஸ்கரன் தனது கைப்பேசி கேமராவில் பதிவு செய்து கொண்டு குரங்கணி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா் ராஜாவைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பேரவைத் தோ்தல்: வாக்குப்பதிவு பொருள்களுக்கான டெண்டா் வெளியீடு!

காரிய அனுகூலம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நில அளவையா்கள் காத்திருப்புப் போராட்டம்

நைஜீரியால் பள்ளி மாணவா்கள் மீண்டும் கடத்தல்

நிதீஷ் வெற்றி ரகசியம்!

SCROLL FOR NEXT