முகப்பு
தேனி

புகையிலைப் பொருள்கள் விற்பனை: 2 போ் கைது

போடியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 26 நவம்பர், 2025 at 9:39 PM
பகிர்:

போடி: போடியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், போடி நகா் காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது போடி இரட்டை வாய்க்கால் அருகேயுள்ள புதூரைச் சோ்ந்த மணிகண்டன் (40), டிவிகேகேநகரைச் சோ்ந்த முருகசாமி (56) ஆகியோா் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதுதொடா்பாக பாலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் விசாரிக்கின்றனா். அவா்களிடமிருந்து புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →