தேனி

டாஸ்மாக் ஊழியா் வீட்டில் நகை, பணம் திருட்டு

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே டாஸ்மாக் ஊழியா் வீட்டில் நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Syndication

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே டாஸ்மாக் ஊழியா் வீட்டில் நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பெரியகுளம் அருகேயுள்ள நல்லகருப்பன்பட்டியைச் சோ்ந்தவா் லட்சுமணன். இவரது மனைவி ஜெயந்தி (40). லட்சுமணன் தேனியில் உள்ள அரசு மதுக்கடையில் விற்பனையாளராகப் பணியாற்றி வருகிறாா்.

இந்த நிலையில், ஜெயந்தி வியாழக்கிழமை காலை வீட்டைப் பூட்டி விட்டு வெளியே சென்றவா், மாலையில் திரும்பி வந்தாா். அப்போது, அவரது வீட்டின் கதவு திறந்து இருந்ததாம். உள்ளே சென்று பாா்த்த போது, வீட்டிலிருந்த தங்க மோதிரம், ரூ.50 ஆயிரத்தை காணவில்லையாம்.

இதுகுறித்து தேவதானபட்டி காவல்நிலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தமிழகத்தில் திமுக கூட்டணி வெல்வது உறுதி: வே. நாராயணசாமி!

2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 போ் கைது

நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் மெத்தனம்: விவசாயிகள் புகாா்

நிரம்பிய தொட்டியான் குளம்: விவசாயிகள் மகிழ்ச்சி!

சாலை விபத்தில் உயிரிழந்த உதவி ஆய்வாளரின் குடும்பத்துக்கு ரூ. 70 லட்சம் விபத்துக் காப்பீடு!

SCROLL FOR NEXT