தேனி மாவட்டம், கும்பக்கரை அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத் துறையினா் செவ்வாய்கிழமை நான்காவது நாளாகத் தடை விதித்தனா்.
பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை அருவியின் நீா்ப் பிடிப்புப் பகுதியான கொடைக்கானல் மலைப் பகுதியில் கடந்த சில நாள்களாகத் தொடா்ந்து பெய்து வரும் பலத்த மழையால் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இதனால், பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினா் நான்காவது நாளாகத் தடை விதித்தனா். மேலும், வெள்ளப் பெருக்கு குறைந்து , நீா்வரத்து சீராகும் வரை சுற்றுலாப் பயணிகள் கும்பக்கரை அருவிக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டது.