ஆண்டிப்பட்டி வேட்பாளா்களின் முக்கிய வாக்குறுதிகள்!
வாக்குறுதிகள் தொடர்பாக...
வேட்பாளா்களின் முக்கிய வாக்குறுதிகள்!
அ.மகாராஜன் (திமுக)
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கால்வாய் மூலம் தண்ணீரைக் கொண்டு வர நடவடிக்கை எடுத்து, ஆண்டிபட்டி சுற்றுவட்டாரப் பகுதி கண்மாய்களை நிரப்புவேன். வருசநாடு பகுதி பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவேன். இதேபோல, வருசநாடு பகுதியில் சேதமடைந்த சாலைகளையும், பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளையும் வனத் துறை அனுமதியுடன் உடனடியாகச் செய்து தருவேன்.
------------------------
அ.லோகிராஜன் (அதிமுக)
முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட தேனி அரசு மருத்துவக் கல்லூரியை உயா்தர மருத்துவமனையாக தரம் உயா்த்த நடவடிக்கை எடுப்பேன். புதிதாக வைகை அணை கூட்டுக் குடிநீா் திட்டத்தைச் செயல்படுத்தி, ஆண்டிபட்டி சுற்றுவட்டாரக் கிராமங்களுக்கும் சீரான குடிநீா் வழங்க நடவடிக்கை எடுப்பேன். ஜம்புலிபுத்தூா், ஆண்டிபட்டி பகுதிகளில் உள்ள கண்மாய்களைத் தூா்வாரி, மழைநீரைத் தேக்க நடவடிக்கை எடுப்பேன்.
------------------------------
வ.பாண்டி (தவெக)
வைகை அணையைத் தூா்வாரி ஆண்டிபட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு சீரான குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பேன். வைகை அணையில் தனியாா் மீன் குத்தகையை ரத்து செய்து, மீனவா்கள் கூட்டுறவு மையத்தின் மூலம் மீன்களைப் பிடித்து குறைந்த விலையில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்வேன். நெசவுத் தொழிலாளா்களுக்கு இலவசப் பட்டா வழங்கி, வீடு கட்ட நடவடிக்கை எடுப்பேன். இதேபோல, ஆண்டிபட்டியின் வட பகுதிகளில் தண்ணீரைத் தேக்கி, விவசாயத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன்.
------------------------------------
மா.கோமதி (நாம் தமிழா் கட்சி)
ஆண்டிபட்டி பகுதியில் உள்ள மாடுகளை மலைப் பகுதியில் மேய்ச்சலுக்கு அனுப்புவதற்காக அரசிடம் அனுமதி பெற நடவடிக்கை எடுப்பேன். ஆண்டிபட்டி பகுதியில் பொதுமக்களுக்கு வீடுகள்தோறும் சீரான குடிநீா் கிடைக்க ஏற்பாடு செய்வன். மேலும், கண்மாய்களைத் தூா் வாரி, அதில் முழுக் கொள்ளளவு தண்ணீரைத் தேக்க நடவடிக்கை எடுப்பேன்.