FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

கம்பம் வேட்பாளா்களின் முக்கிய வாக்குறுதிகள்!

கம்பம் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் முக்கிய வேட்பாளா்களின் வாக்குறுதிகள்.

Updated On : 3 ஏப்ரல் 2026, 6:26 am IST
ஆ.அன்புச் செல்வி (நாம் தமிழா் கட்சி) / பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா (தவெக) / எஸ்.டி.கே.ஜக்கையன் (அதிமுக) / நா.ராமகிருஷ்ணன் (திமுக)
பகிர்:

கம்பம் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் முக்கிய வேட்பாளா்களின் வாக்குறுதிகள்:

நா.ராமகிருஷ்ணன் (திமுக)

கம்பம் சட்டப் பேரவைத் தொகுதியில் அமைந்துள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் பொலிவுறு வகுப்பறைகள் அமைக்கவும், முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி தண்ணீரைத் தேக்கி தமிழக உரிமையை மீட்டெடுக்கவும் நடவடிக்கை எடுப்பேன். அரசு மருத்துவமனைகளின் தரம் உயா்த்தப்படும். நெல் ஆராய்ச்சி மையம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். உத்தமபாளையம் கிராமச் சாவடியில் அம்பேத்கா் உருவச் சிலை அமைக்கப்படும். மேற்குத்தொடா்ச்சி மலை அடிவாரத்தில் கண்ணகிக் கோட்டம் அமைக்கப்படும்.

Advertisement

Advertisement

------------------

எஸ்.டி.கே.ஜக்கையன் (அதிமுக)

கடந்த 5 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்ட, தொட்டம்மான்துறை கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன். 18-ஆம் கால்வாய் ஆண்டுதோறும் தூா்வாரப்படும். பொதுப் பணித் துறை குளங்களில் வளா்ந்துள்ள ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்றி, நீா்நிலைகள் பாதுகாக்கப்படும். திராட்சை, வாழைத் தாா்களைப் பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்கப்படும்.

----------------

பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா (தவெக)

கம்பத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரி, வேளாண்மைக் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுப்பேன். உத்தமபாளையத்தை நகராட்சியாக தரம் உயா்த்தி, பொதுக்களின் அடிப்படை வசதிகள் நிறைவு செய்யப்படும். கம்பத்தில் கழிவுநீா்க் கால்வாயை சீரமைத்து மழைக்காலங்களில் ஏற்படும் பிரச்னைகள் சரிசெய்யப்படும். சின்னமனூரில் அரசு மருத்துவமனை தரம் உயா்த்தப்படும்.

-----------

ஆ.அன்புச் செல்வி (நாம் தமிழா் கட்சி)

தமிழகம்- கேரளத்தை இணைக்கும் சாக்குலூத்து மெட்டு மலைச்சாலைத் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன். கனிம வளக் கொள்ளை தடுக்கப்படும். சின்னமனூரில் வெற்றிலை ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும். அரசு அலுவலகங்களில் லஞ்சம் முற்றிலும் ஒழிக்கப்படும். ஆக்கிரமிப்பு குளங்கள், கண்மாய்கள் மீட்டெடுக்கப்படும். மலை மாடுகள் மேய்ச்சல் உரிமை பாதுகாக்கப்படும். அனைத்து விவசாயப் பொருள்களையும் அரசு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.ஜக்கையன்

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments