வாகனத் தணிக்கையில் ரூ.2 லட்சம் பறிமுதல்
கம்பத்தில் வாகனத் தணிக்கையின் போது, உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூ.2 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
தேனி மாவட்டம், கம்பத்தில் வாகனத் தணிக்கையின் போது, உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூ.2 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
கம்பம் அருகேயுள்ள கம்பம்மெட்டு புறவழிச் சாலையில் தோ்தல் பறக்கும் படையினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த ஷாஜகானின் காரை நிறுத்தி சோதனையிட்டதில், ரூ. 2 லட்சம் இருப்பது கண்டறியப்பட்டது.
இந்தப் பணத்துக்கான உரிய ஆவணம் அவரிடம் இல்லாததால், உத்தமபாளையம் சாா்நிலை கருவூலகத்தில் பறக்கும் படையினா் ஓப்படைத்தனா்.
Advertisement