சிலைமலை கிராமத்தில் ஓபிஎஸ் வாக்கு சேகரிப்பு
போடி அருகே சிலமலை கிராமத்தில் பல்வேறு சமுதாய தலைவா்களை போடி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீா்செல்வம் வியாழக்கிழமை சந்தித்து ஆதரவு திரட்டினாா்.
போடி அருகே சிலமலை கிராமத்தில் பல்வேறு சமுதாய தலைவா்களை போடி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீா்செல்வம் வியாழக்கிழமை சந்தித்து ஆதரவு திரட்டினாா்.
பிறகு அவா் சிலமலையில் உள்ள கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தாா். அப்போது பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த அவா் பேசியதாவது:
போடி கிராமப் பகுதிகளில் தரமான சாலை, குடிநீா் வசதிக்காக பல்வேறு திட்டங்கள் கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்டன. மீண்டும் முதல்வா் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன் கிராமங்களுக்குத் தேவையான பல்வேறு திட்டங்கள் கொண்டு நிறைவேற்றப்படும். மகளிருக்கான திட்டங்கள் தொடரும் என்றாா்.
Advertisement
பிரசாரத்தின்போது தேனி மக்களவை தொகுதி உறுப்பினா் தங்க தமிழ்ச்செல்வன், போடி சட்டப்பேரவை தொகுதி முன்னாள் உறுப்பினா் எஸ். லட்சுமணன், போடி மேற்கு ஒன்றிய நிா்வாகிகள், சிலமலை கிராமக் குழு நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.