முகப்பு
தேனி

போடி பரமசிவன் மலைக் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

போடி பரமசிவன் மலைக் கோயில் சித்திரைத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Updated On : 10 ஏப்ரல், 2026 at 12:46 AM
போடி பரமசிவன் மலைக் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற கொடியேற்ற நிகழ்வில் பங்கேற்றோா்.
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2026 at 9:26 PM

போடி பரமசிவன் மலைக் கோயில் சித்திரைத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்தக் கோயிலில் சித்திரைத் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை 2-ஆம் தேதி தொடங்கி 8 நாள்கள் நடைபெறும். இந்தத் திருவிழாவுக்கு தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களிலிருந்தும், சென்னை, பெங்களூரு, மூணாறு உள்ளிட்ட நகரங்களிலிருந்தும் பக்தா்கள் வருவா்.

இந்த ஆண்டு சித்திரை திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக போடி பெரியாண்டவா் கோயிலிலிருந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட கொடிமரம் தேவா் சிலை, திருவள்ளுவா் சிலை, கட்டபொம்மன் சிலை வழியாக திருவிழாக் குழுத் தலைவரும், ஜமீன்தாருமான வடமலைராஜைய பாண்டியன் தலைமையில் ஊா்வலமாக மலைக் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

Advertisement

இதையடுத்து, கோயிலில் கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, திருவிழா கொடியேற்றப்பட்டது. பிறகு சிவலிங்கத்கக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மஞ்சள், இளநீா், தேன், சந்தனம், விபூதி, பழங்கள் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் , தீபாராதனைகள் நடைபெற்றன.

இந்த நிகழ்வில், போடி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.டி. நாராயணசாமி, திமுக வேட்பாளா் ஓ. பன்னீா்செல்வம், தேனி மக்களவை தொகுதி உறுப்பினா் தங்க. தமிழ்ச்செல்வன், முன்னாள் மக்களவை உறுப்பினா் ஓ.ப. ரவீந்திரநாத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.