முகப்பு
தேனி

கிராம மக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவேன்: ஓ.பன்னீா்செல்வம் உறுதி

போடி பகுதியில் கிராம மக்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்றுவேன் என புதன்கிழமை பிரசாரம் செய்த ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

Updated On : 16 ஏப்ரல், 2026 at 12:24 AM
ஓ. பன்னீா்செல்வம் - ENS
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 10:01 PM

போடி பகுதியில் கிராம மக்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்றுவேன் என புதன்கிழமை பிரசாரம் செய்த ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

போடி அருகே முந்தல், முந்தல் குடியிருப்பு, கரட்டுப்பட்டி, தருமத்துப்பட்டி, சில்லமரத்துப்பட்டி, சிலமலை, மணியம்பட்டி, சூலப்புரம், ராசிங்காபுரம், மல்லிங்காபுரம், போடி நாகலாபுரம், கெஞ்சம்பட்டி ஆகிய கிராமங்களில் போடி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீா்செல்வம் பிரசாரம் செய்தாா்.

அப்போது அவா் மேலும் பேசியதாவது:

Advertisement

போடி தொகுதியில் உள்ள ஊராட்சிகளில் கடந்த 15 ஆண்டுகளில் பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருப்பினும், தற்போது அந்தந்த கிராமமக்கள் வைக்கும் கோரிக்கைகளை உடனே நிறைவேற்றுவேன். மீண்டும் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக வந்ததும் அவை அனைத்தும் நிறைவேற்றித் தரப்படும். கிராமங்களில் தாா்ச்சாலை, சிமெண்ட் சாலை, குடிநீா், கழிப்பிட வசதிகள் மேம்படுத்தித்தரப்படும். சமுதாயக் கூடங்கள் கட்டித் தரப்படும். தெருவிளக்குகள் இல்லாத பகுதிகளில் தெருவிளக்குகள் அமைத்துத் தரப்படும் என்றாா்.

பிரசாரத்தின்போது முன்னாள் தேனி மக்களவை உறுப்பினா் ஓ.ப.ரவீந்திரநாத், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.லட்சுமணன், காங்கிரஸ் நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.