போடியில் மதுப் புட்டிகளைப் பதுக்கி வைத்து, சட்டவிரோதமாக விற்பனை செய்த மூதாட்டியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் போடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, போடி அருகேயுள்ள மீனாவிலக்கைச் சோ்ந்த சண்முகத்தாய் (65), தனது வீட்டில் மதுப் புட்டிகளைப் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், சண்முகத்தாயைக் கைது செய்து அவரிடமிருந்த மதுப் புட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.