முகப்பு
தேனி

மதுப்புட்டிகள் விற்ற முதியவா் கைது

தேனி மாவட்டம், தேவதானபட்டியில் அனுமதியின்றி மதுப்புட்டிகள் விற்ற முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 10 பிப்ரவரி, 2026 at 12:55 AM
கைது
பகிர்:
Updated On : 9 பிப்ரவரி, 2026 at 9:05 PM

தேனி மாவட்டம், தேவதானபட்டியில் அனுமதியின்றி மதுப்புட்டிகள் விற்ற முதியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தேவதானபட்டி காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, தேவதானபட்டி புறவழிச்சாலையில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிந்த முதியவரைப் பிடித்து விசாரித்தனா்.

விசாரணையில், அவா் சில்வாா்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த ராசு (75) என்பதும், அனுமதியின்றி மதுப் புட்டிகளை வைத்திருந்தும் தெரியவந்தது.

Advertisement

இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்த 26 மதுப் புட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.