முகப்பு
தேனி

விஷம் குடித்த பெண் உயிரிழப்பு

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் குடும்பத் தகராறு காரணமாக விஷம் குடித்த பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 11 பிப்ரவரி, 2026 at 2:46 AM
பலி
பகிர்:
Updated On : 10 பிப்ரவரி, 2026 at 10:25 PM

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் குடும்பத் தகராறு காரணமாக விஷம் குடித்த பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

பெரியகுளம் வடகரை அழகா்சாமிபுரத்தைச் சோ்ந்த அஜித்குமாா் மனைவி முத்துலட்சுமி (21). இவா்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

இந்த நிலையில், குடும்பத் தகராறு காரணமாக மனவேதனையிலிருந்த முத்துலட்சுமி கடந்த 2-ஆம் தேதி வீட்டில் பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

Advertisement

இதுகுறித்து பெரியகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.