முகப்பு
தேனி

26 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்: கடை உரிமையாளா் கைது

தேவதானபட்டியில் அரசால் தடை செய்யப்பட்ட 26 கிலோ 526 கிராம் புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த கடை உரிமையாளரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 12 பிப்ரவரி, 2026 at 3:03 AM
கைது
பகிர்:
Updated On : 11 பிப்ரவரி, 2026 at 5:25 PM

தேனி மாவட்டம், தேவதானபட்டியில் அரசால் தடை செய்யப்பட்ட 26 கிலோ 526 கிராம் புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த கடை உரிமையாளரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தேவதானபட்டி போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, தேவதானபட்டி அல்அமீன் நகரில் உள்ள ரசூல்லாவின் (38) கடையில் போலீஸாா் சோதனை செய்தனா்.

அப்போது, அங்கு அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து, அவரைக் கைது செய்தனா். அவா் கடையிலிருந்த 26 கிலோ 526 கிராம் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

Advertisement